![]() |
சமூக வகுப்பு |
சமூகம் என்பது தங்களிடையே தொடபுகளைப் பேணிக்கொள்ளக் கூடிய மக்கட் குழுவினரை குறித்து நிற்கின்றது. சமூகமானது இனம், மதம், மொழி, ஆண் , பெண் பாலியல் இயல்பு, சமூக வகுப்பு, என்பவற்றுக்கு ஏற்ப பல்வகைப்பட்டு காணப்படுகின்றது. இச்சமூக மக்களிடையே பொருளாதாரம், நாகரீகம், கலாச்சார விடயங்களை அடிப்படையாகக் கொண்ட சமூக வகுப்புக்கள் தோற்றம் பெறுகின்றன.சமூக வகுப்புக்கள் தொடர்பான சமூகவியல் அறிஞர்களின் கூற்றுக்கள்.
“சமூக அடுக்கமைவுக்கான அடிப்படைகளை பொருளாதாரக் காரணிகள் தீர்மானிக்கின்றன. இதனையே நாம் சமூக வகுப்பு என்கிறோம்”
- கார்ள் மாக்ஸ்-
“பல்வேறு மக்கள் குழுவமைப்புக்களிடையே நிலவும் கட்டமைப ;புசார் சமமின்மை அல்லது ஏற்றத்தாழ்வு” - கிட்டன்ஸ் -1989
“அதிகாரம், கௌரவம், செல்வம் என்பன உள்ள உறுப்பினர்கள் அடங்கும் சமூகக் குழுக்கள் காணப்படல்” - ஹரலம்போஸ், ஹொல்பேர்ன் 1990
“ஒருவரையொருவர் அணுகுவதில் நெருக்கமான தன்மையைக் கொண்ட பாரிய மனிதக்குழுவே சமூக வகுப்பு ஆகும்.” - டேவிஸ் காட்னர்ஸ்
“பொதுவான தொழில், வயது, கல்வி ஆகியவற்றில் ஒத்த வாழ்க்கையைப் பழக்கங்கள், கருத்துக்கள், உணர்வுகள், நடத்தைகளில் ஒத்த தனியாட்களின் குழுவே சமூக வகுப்பாகும்” - இன்ஸ்பர்க்-
![]() |
social class |
மனித சமூகத்தில் பல்வேறு முறைகளிலும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. இந்த ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்க “சமூக வகுப்பு” என்பதற்கு “சமூக அடுக்காக்கம்” எனும் கலைச்சொல்லைப் பயன படுத்துகின்றனர். சமூக அடுக்காக்கத்திற்கு ஏற்ப சமூகத்தின் மதிப்பு செயல்பாடுகள் வேறுபட்டு அமைவதனை காணலாம். இவ்வாறே சமூகத்திலுள்ளது வெவ்வேறுபட்ட அடுக்கமைவிலுள்ள குழுக்களுக்கு வாய்ப்புக்களும் வசதிகளும் ஒரே மாதிரியானவையாக கிடைப்பதில்லை. சமூக அடுக்காக்கத்தின் உயர் நிலையில் உள்ள மேலடுக்கக் குழு பல்வேறு வகைப ;பட்ட நன்மைகளை, சாதகமானத் தன்மைகளை அனுபவிக்கின்ற வேளை கீழ் நிலையில் உள்ள கீழ் அடுக்க சமூகக் குழுவானது பல்வகைப்பட்ட இடர்பாடுகளையும் சிரமங்களையும் அனுபவிப்பதாகக் காணலாம். இத்தகைய சமூக அமைப்பில் சமத்துவமின்மையானது நிரந்தரமாக நிலைபெற்றிருப்பதுடன். இது தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டும் வருகிறது (மனோகரன்,2018).
சமூக வகுப்பின ; வகைகள்.
1. உயர் சமூக வகுப்பு.
2. நடுத்தர சமூக வகுப்பு.
3. தாழ் சமூக வகுப்பு.
இலங்கைச் சமூகத்தில் அடையாளம் காணக்கூடிய சமூக வகுப்புக்களாக
பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.
1. மேல் நடுத்தர வர்க்கம்.
2. கீழ் நடுத்தர வர்க்கம்.
3. தொழிலாளர ; வர்க்கம்
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்